பிரேமலாலுக்கு மட்டும் எப்படி அனுமதி – சரத் கேள்வி

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, இன்று சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“2010ம் ஆண்டு என்னை சிறைக்குள் தள்ளினார்கள். அன்று ஆட்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாகவே நான் கைது செய்யப்பட்டேன். 30 மாதங்கள் வரை நான் தண்டனை பெற்றிருந்தேன். சிறைத் தண்டனைப் பெற்ற பின்னர்தான், நான் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டேன்.

ஆனால், இன்று குற்றவாளியொருவரே உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அன்று எனக்கு நாடாளுமன்றுக்கு வர சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. அப்படியிருக்கும்போது, இப்போது இவருக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்ப விரும்புகிறேன்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!