தமிழகத்திற்கு காவிரி நீர் அதிகளவு திறக்கப்பட்டுள்ளது-தேவகவுடா

நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஓசூரில் ஊடகவியளாலர்களிடம் தெரிவித்ததாவது.

‘தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதே காரணமாகும். மேலும் 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

எங்கள் பகுதியில் (மண்டியா) நான்கு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறை, நீர்மட்டம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை, ஆணையத்திடம் உள்ளது. நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து, என்ன மாதிரியான பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்று அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, பயிர்களை நடவு செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசனின் நிலைப்பாடு மீண்டும் பேச்சுவார்த்தை என்பதாக இருப்பினும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால், அனைத்து தரப்பும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக, கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.’ என்றார்.

நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிகளவிலான காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!