20ஆவது திருத்த வரைபை வெளியிடத் தயார்! கோட்டாபய அறிவிப்பு

20வது திருத்தம் குறித்த புதிய நகல்வரைபை வெளியிட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ்சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் புதிய நகல்வரைபு குறித்த உத்தரவாதத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

20வது திருத்தம் குறித்த நகல்வடிவு குறித்து தாங்கள் வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்துகுமாரதுங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளபோதிலும் 20வது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கான பலம் உள்ளபோதிலும் மக்களின் கரிசனைக்கு பொதுஜன பெரமுனவின் உயர் தலைமை அக்கறை காட்டிய விதத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நகல்வடிவை இரத்துச்செய்வதற்கு தயாராகயிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள கெவிந்துகுமாரதுங்க திருத்தப்பட்ட நகல்வடிவை மீள வெளியிட தயார் என குறிப்பிட்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!