ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு – கூட்டமைப்பு வரவேற்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசலெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இலங்கை ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்தத் திருத்தத்தின் மூலம் மீறுகின்றது எனத் தெரிவித்து இலங்கையின் போக்குக்கு அவர் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

ஆணையாளயரின் இந்தக் கரிசனையையும் வரவேற்றுள்ள சுமந்திரன் , இலங்கை அரசு தனது போக்கில் உடன் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!