பிரான்சில் பட்டப்பகலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் இளம் பெண் ஒருவர் பாவாடை அணிந்ததற்காக பட்டப்பகலில் தாக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரசாங்கம், இது மிகவும் கவலைக்கிடமான சம்பவம் எனவும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளது. எலிசபெத் என மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள 22 வயதான குறித்த பெண்ணை மூவர் கும்பல் வழிமறித்து மிரட்டியதுடன், முகத்தில் குத்துவிட்டுள்ளனர்.

சம்பவத்தின்போது எலிசபெத் தனியாக நடந்து தமது குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது மூவர் கும்பல் அவரை வழிமறித்துள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த ஆடையை சுட்டிக்காட்டி நீ என்ன பாலியல் தொழிலாளியா என கோபமாக வினவியுள்ளனர். தொடர்ந்து அந்த மூவரில் இருவர் தம்மை நகர விடாமல் தடுத்ததுடன், அதில் ஒருவர் முகத்தில் குத்தியதாக எலிசபெத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை ஒரு டசின் மக்களுக்கும் மேலானோர் பார்த்ததாகவும் ஆனால் யாரும் தலையிடவில்லை என எலிசபெத் கூறியுள்ளார். சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று புதனன்று பார்வையிட்ட நாட்டின் உள்விவகார இளம் அமைச்சர் மார்லின் ஷியாப்பா, பாவாடை அணிந்திருந்ததால் எலிசபெத் தாக்கப்பட்டதாக தாம் கருதவில்லை எனவும் சட்டத்தால் தங்களை கட்டுப்படுத்த முடியாது என கருதும் வன்முறையை தூண்டும், தவறான பார்வை கொண்ட ஒரு சமூகத்தால் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்றார். மட்டுமின்றி, பொது இடத்தில் பெண்களுக்கு எதிரான எந்தவிதமான துன்புறுத்தல் சம்பவங்களையும் கண்டால் காவல்துறையினரை அழைக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!