‘கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டை சூழ்ந்துவிட்டது’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்கனவே தனது நாட்டை சூழ்ந்துவிட்டது என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில் கொரேனாவின் இரண்டாவது அலை ஏற்கனவே பரவி கொண்டிருக்கிறது. வசந்த காலத்தை விட மோசமாக இருக்கக்கூடிய ஈக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்று ட்ரூடோ கூறினார்.

இன்று பதிவாகும் கொரோனா வழக்கு எண்ணிக்கைகளையோ அல்லது நாளை பதிவாக போகும் வழக்கு எண்ணிக்கைகளையோ கூட நம்மால் மாற்ற முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவிறியதின் மூலம் பதிவாக போகும் கொரேனா வழக்கு எண்ணிக்கைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. ஆனால் அக்டோபரிலும், குளிர்காலத்திலும் நாம் கொரோனா எண்ணிக்கைகளை மாற்ற முடியும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

உலக சுகாதார அமைப்பு மார்ச் 11 அன்று கொரோனாவை தொற்றுநோயாக அறிவித்தது. இன்றுவரை, உலகளவில் 31.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,74,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கனடா இதுவரை சுமார் 1,50,000 கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளது, இதில் 9,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!