சர்வஜன வாக்கெடுப்புக்கும் தயார்!

20ஆவது திருத்தச் சட்டத்தில், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தேவையான எந்த விடயமும் இல்லை என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும், நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், நீதிமன்ற தீர்ப்பின் படி, அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தை மீறி செயற்படாது என்றும், நீதிமன்றத்தைப் போலவே நாடாளுமன்றத்தின் மீதும் கவனம் செலுத்துவோம் எனவும், அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

விரைவான பொருளாதார அபிவிருத்தியை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதே இதன் பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!