பிரேக் என்று அக்சிலேட்டரை அமுக்கியதால் கச்சேரிக்குள் களேபரம்! – 12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்டர்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குப் பொருள்களை ஏற்றி வந்த ஹன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 12 வாகனங்களை மோதித் தள்ளியது. இந்தக் களேபரம், நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்துக்குள் நடந்தது.

மாவட்ட செயலகத்துக்குத் தேவையான உபகரணங்களை ஏற்றி வந்த ஹன்ரர் வாகனம் அவற்றை இறக்கிவிட்டுப் புறப்படத் தயரானது. அப்போது அது கட்டுப்பாட்டை இழந்தது.மாவட்ட செயலக உத்தியோகத்தத்தர்களின் வாகனத் தரிப்பிடத்துக்குள் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்கள், 2 சைக்கிள்களை மோதித் தள்ளியது. பெரும்பாலனவை பெண் உத்தியோத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகள் நடத்தினர். பிரேக்குக்குப் பதிலாக அக்சிலேட்டரை அழுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!