ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது. ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!