முடக்கப்பட்டது புங்குடுதீவு!

புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், அங்குள்ள 1,212 குடும்பங்களைச் சேர்ந்த 3,915 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கு தொற்று உறுதியானதன் . அடிப்படையில், அவருக்கு நெருக்கமான குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ன அடிப்படையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்தர் என்ற அடிப்படையில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில், சுமார் 88 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 22 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டால் எதிர்வரும் நாட்களில் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும்.சில பிரதேசங்களை முடக்க வேண்டிய தேவையும் ஏற்படும்” என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!