தக்காளி சாகுபடியில் பரவி வரும் நோய்த்தாக்குதல்: விவசாயிகள் அச்சம்!

உடுமலை பகுதியில், தக்காளி சாகுபடியில் வேகமாக பரவி வரும் நோய்த்தாக்குதலால், செடிகள் கருகி, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நடப்பு சீசனிலும், பாப்பனுாத்து சுற்றுப்பகுதியில், 300 ஏக்கருக்கும் அதிகமாக, தக்காளி நாற்று நடவு செய்யப்பட்டு, செடிகள் வளர்ச்சித்தருணத்தில் உள்ளன. இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, மழை பெய்யாததால், பல்வேறு நோய்த்தாக்குதல், சாகுபடியில், அதிகரித்துள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: வரும் சீசனில், தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நாற்று நடவு செய்தோம். ஆனால், செடிகளின் இலை, இலைக்காம்பு திடீரென வாடி கருகி வருகிறது. படிப்படியாக வளர்ச்சி இல்லாமல், செடி முற்றிலுமாக, கருகி வருகிறது. செடிகளை காப்பாற்ற வழிதெரியவில்லை. செடியின் வளர்ச்சித்தருணத்திலேயே நோய்த்தாக்குதல் பரவுவதால், மகசூலும், குறையும் அபாயம் உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!