அஹங்கமையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மதகுருமார்களின் பி.சி.ஆர். பரிசோதனை!

அஹங்கம போகஹவத்தை விகாரையில் தனிமைப்படுதப்பட்ட மதகுருமார்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் தெரிவு செய்யப்பட்டுள்ள சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கம்பஹா வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இருவர் அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வத்துப்பிட்டிவல பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய குறித்த இருவரும் மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாய் மற்றும் அவரது புதல்வியின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!