அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பருப்பு, டின்மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டின்மீன் (பெரியது) ஒன்று 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், சீனி ஒரு கிலோ 85 ரூபாய்கும் பருப்பு ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!