கிராமங்களை தேடி ஓடும் 87 வயது டாக்டர்!

மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும், 87 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில், ராம்சந்திர தாண்டேக்கர், என்ற, 87 வயதான டாக்டர் வசித்து வருகிறார். இவர், 60 ஆண்டுகளாக, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள குக்கிராமங்களுக்கு தினமும் சென்று, அங்குள்ள ஏழை மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வயதானோர், வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஆனால், எதையும் பொருட்படுத்தாத தாண்டேக்கர், இந்த தொண்டு சேவையை தொடர்ந்து செய்து வருகிறார். இதுகுறித்து, தண்டேக்கர் கூறுகையில்,“கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே என் ஒரே எண்ணம். அதை முன்பும் செய்தேன். அதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்வேன்,” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!