புலிகள் அழிக்கப்பட்டதற்கு சர்வதேச தடையே காரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது, சர்வதேச நாடுகள் விதித்த தடையே அந்த அமைப்பு 2009 இல் அழிக்கப்பட்டதற்கு காரணம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என்று, டைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு குறித்து பி.பி.சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் உரிமைகள் இல்லாது செய்யப்பட்டதாகவும், தற்போது பிரித்தானியாவின் நிலைப்பாட்டை தமிழர் என்ற வகையில் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீதான உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகள் தவறிழைக்கவில்லை என்ற வகையிலான பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை விடுத்துள்ளதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய ஆணைக்குழுவின் தீர்ப்பை மதித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!