கஞ்சா பொதிகளை கடலில் வீசி விட்டு தப்பிக்க முயன்றவர்கள் கைது!

தமிழகத்தில் இருந்து கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவரைக் கைது செய்துள்ள கடற்படையினர், அவர்களை விசாரணைக்குப் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றுக் காலை சந்தேகத்திடமான மீன்பிடிப் படகு ஒன்றின் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையினர், அதனைக் கைப்பற்றியுள்ளனர்.

அதிலிருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் இருந்து கேரள கஞ்சாவை கடத்தி வந்ததாவும், கடற்படையினரை கண்டதும் கடலில் போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடலில் நடத்திய தேடுதலில் 82 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!