மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்துக்கு தடை!

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய போக்குவரத்துகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைக்கு அமைய அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான செயலணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தவிர்க்கும் வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

கொவிட் 19 பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடன்நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!