அமெரிக்க தேர்தலில் சாதித்து வரும் தமிழர்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து முதல் முறையாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் Democratic கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா தற்போது Illinois மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜாவின் மனைவி பெயர் ப்ரியா ஆகும். இவர் மருத்துவராக உள்ளார். இந்த தம்பதிக்கு விஜய், விக்ரம் என்ற 2 மகன்களும், சோனியா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் ராஜா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரசில் 70% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது முறையாக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!