10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்த லண்டன் போலீசார்!

லண்டனில் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் 10 பேரின் புகைப்படங்களை சந்தேகத்தின் அடிப்படையில், பொலிசார் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் சமீப காலமாக கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்றவை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, தலைநகரான லண்டனில் தேடப்படும் 10 மோசமான குற்றவாளிகளின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் துப்பாக்கிச் சூடு, உடலுக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வன்முறை குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள், வயது 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இருக்கும், சந்தேகநபர்களில் ஒருவரான Jordan King என்ற 25 வயது நபர், வடமேற்கு லண்டனில் ஒரு கத்து குத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.

அதே போன்று 22 வயதான Fabian Castillo- Belaqa என்பவர் செல்சியாவில் குண்டுவெடிப்பில் தேடப்படும் சந்தேக நபர், அதைத் தொடர்ந்து 23 வயதான Mark Maloney கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் நகை கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், 21 வயதான Raymond Olabode என்பவன், வகுப்பு A வகை போதை மருந்து விவகாரம் தொடர்பாகவும், 26 வயதான Ruairi Bicknell என்ற நபர் 2011-ஆம் ஆண்டு தன்னுடைய உரிமை நிபந்தனைகளை மீறியுள்ளார்.

மீதமுள்ள சந்தேக நபர்கள் ஒருவரான Alan Kozhir என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி South Hampstead-ல் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்,

அதே போன்று மார்ச் 2-ஆம் திகதி அன்று எட்வேரில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கியை வைத்திருக்க விரும்பிய Marian Slatioreanu என்ற 39 வயது நபர், கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் திகதி செல்சியாவில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக Mark Toth என்ற 35 வயது நபர்,

Robert Jones(36) என்பவர் கத்தி குத்து சம்பவத்திலும், 29 வயதான Samir Drias வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கர்சன் தெருவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அன்று நடந்த ஒரு கொள்ளை மற்றும் கத்து குத்து சம்பவம் தொடர்பாகவும் தேடப்பட்டு வருகிறார்.

இது குறித்து வன்முறைக் குற்றப் பணிக்குழுவின் துறை ஆய்வாளர் Dean Purvis கூறுகையில்,

நாங்கள் இடைவிடாமல் வன்முறைக் குற்றவாளிகளைப் பின் தொடர்ந்து, அவர்களை பிடித்து நீதிக்கு முன் கொண்டு வருகிறோம்.

இதன் மூலம், எங்கள் நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஆனால் இதற்கு எங்களால் மட்டும் முடியாது, எங்களுக்கு பொதுமக்களின் உதவியும் தேவை.

இதில் குற்றவாளிகள் யாரேனும் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

இந்த நபர்கள் எங்கள் சமூகங்களில் தீங்கு மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர், எங்களின் தொடர்ச்சியான உந்துதலின் ஒரு பகுதியாக 850-க்கும் மேற்பட்ட உயர் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளை நாங்கள் ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

நாங்கள் இதை நிறுத்த மாட்டோம், இரவும், பகலுமாக தேடுவோம், இறுதியில் கண்டுபிடிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!