திறக்கப்பட்ட பள்ளிகள்: 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா – சிக்கலில் மாட்டிக்கொண்ட மாநிலம்!

ஆந்திர மாநிலத்தில் அவசர கோலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், 829 ஆசிரியர்கள் மற்றும் 575 மாணவ செல்வங்களுக்கு கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் நோயத் தொற்று பரவலை அடுத்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுரிகள் மூடப்பட்டன. இதனால், கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் கடந்த திங்கள்கிழமை முதல் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர்முடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

இதில், 70 ஆயிரத்து 790 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 829 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதேபோல, 95,763 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 575 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 262 ஆசிரியர்களுக்கும், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைவாக 52 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஆந்திராவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!