மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கூடிய அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விசீர்த்திருத்தங்கள், திறந்த பல்கலைகழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், மேல்மாகாண பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து இதற்கென திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் ஏனைய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளின் உதவிகளை கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!