மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அஞ்சும் பெற்றோர்கள்!

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைதொடர்ந்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதையடுத்து அரசு, தனியார் பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு நடைபெற்றது. ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள், 3 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகள், 6 ஆயிரம் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்துக்கேட்பு நடந்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். கருத்து கேட்பு கூட்டத்தில் 25 சதவீதம் குறைவான பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்றும் மழை, குளிர் காலமென்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து தமிழக அரசு விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!