புதிய கொரோனா பரிசோதனை முறைக்கு சுகாதார அமைச்சு அனுமதி!

கொரோனா தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்கான Rapid Antigen Test பரிசோதனைக் கருவிக்கு, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆய்வுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த Rapid Antigen Test பரிசோதனைக் கருவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆய்வுகூட சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், Rapid Antigen Test பரிசோதனைக் கருவியை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய தொகுப்பு சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த கருவிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இதனை, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!