அரசு நல்ல முடிவை அறிவிக்கும் – ஹக்கீம் நம்பிக்கை!

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்கும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்கும். நாடாளுமன்றம் இதற்கு உரிய தீர்வை முன்வைக்கும் என என நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த விவகாரம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

முஸ்லிம் சமுகத்தின் வேண்டுகோள்களை புறக்கணித்து சுகாதார அமைச்சு விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை புதைப்பது என்பது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையின் முக்கியமான பகுதி” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!