வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு : அஜித் ரோஹன!

நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாவே வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே வாகன சாரதிகள் மற்றும் பாதாசாரிகள் வீதி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் ஊடாக வாகன விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!