சீனாவுக்கு முன்னரே இத்தாலியில் கொரோனா பரவல் இருந்துள்ளது: வெளியான அதிர்ச்சி அறிக்கை!

கொரோனா பெருந்தொற்றுக்கு ஒப்பான அறிகுறிகளுடன், இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நபராக இருக்கலாம் பிரித்தானியாவில் நோய் பரவலுக்கு காரணம் என அஞ்சப்படுகிறது. பிரித்தானியாவின் டோர்செஸ்டர், டோர்செட் பகுதியை சேர்ந்த 67 வயதான பிரையன் ஸ்டூட்லி என்பவரே அவர். மர்மமான அறிகுறிகளுடன், இறக்கும் தருவாயில் பிரையன் ஸ்டூட்லி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவருக்கு செயற்கை சுவாசம் அளித்துள்ளனர்.

செப்டம்பர் தொடக்கத்தில் ரோம் நகருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வந்த பின்னரே பிரையன் ஸ்டூட்லி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இருந்து திரும்பிய ஓரு வாரத்திலேயே தமக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறும் பிரையன் ஸ்டூட்லி,

அத்துடன் வரட்டு இருமலும் மூச்சுவிட சிரமும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவதை உணர்ந்த பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் டிசம்பர் மாதம் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்னர், செப்டம்பர் மாதமே இத்தாலியில் கொரோனா பரவல் இருந்துள்ளதை இது உறுதி செய்வதாக பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி மிலன் நகரில் அமைந்துள்ள புற்றுநோய் மையமும் செப்டம்பர் மாதத்தில் இது தொடர்பான சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.

பிரையன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ள நிலையில், சீனாவுக்கு முன்னரே இத்தாலியில் கொரோனா பரவல் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஆனால், இத்தாலியில் இருந்த வேளையில், சீனத்து சுற்றுலாப்பயணிகளுடன் தாம் பழகியதாகவும் பிரையன் தெரிவித்துள்ளார்.

பிரையானை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது பிரையன் குடும்பத்தினர் அனைவரும் குணமடைந்திருந்தாலும், கொரோனா பரவல் முதலில் ஏற்பட்டது சீனாவிலா அல்லது இத்தாலியிலா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!