அபராதத் தொகையை செலுத்திய சசிகலா: விரைவில் விடுதலை!

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பெங்களூரு தனிநீதிமன்றத்தில் சசிகலா செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 2017 பிப்ரவரி 15 ம் திகதி முதல் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 44 மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில், அவரது சார்பில் அபராத தொகைக்கான வங்கிவரையோலையை வழக்கறிஞர் சி.முத்துகுமார் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை செலுத்தினார்.

இதன் மூலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி இறுதியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!