மாவீரர் நினைவேந்தல் : யாழ். மேல் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரிய குறித்த மனு யாழ் மேல்நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது எனக் கோரி குறித்த மனு யுத்தத்தால் உறவுகளை இழந்த பல பெற்றோர்கள் சர்பில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!