நிவர் புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைப்பு!

புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், நாளை மாலை பாண்டிச்சேரி அருகே “நிவர்” புயல் கரையை கடக்கும்போது மிக கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள தவிர்க்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!