யாழ்ப்பாணத்தில் 200 மில்லி மீற்றர் மழை பெய்யும் சாத்தியம்

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் காற்றின் வேகமானது 80 தொடக்கம் 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதுடன், திடீரென 100 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடுமெனவும் பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!