இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் திறக்கப்பட்டது!

இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று (08) மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது.

மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த மின் நிலையத்தை திறந்து வைத்தார்.

அத்துடன் பிரதான தேசிய மின் கட்டமைப்புடன் இந்த நிலையம் பிரதமரால் இணைக்கப்பட்டது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின் உற்பத்தி மையம் அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!