மஹாபொல நிதி மோசடி: விசாரணை சிஐடியிடம் பாரப்படுத்தப்பட்டது!!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மஹாபொல அறக்கட்டளை நிதியிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்கான பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வித காலதாமதமும் இன்றி மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலுவைத் தொகை அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மகாபொல அறக்கட்டளை நிதியத்தை அபிவிருத்தி செய்ய, ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!