அமெரிக்காவில் திடீரென வெடித்து சிதறிய கார்: போலீசார் தீவிர விசாரணை!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்விலி நகரில் உள்ள சர்ஜ் தெரு-கமர்ஸ் தெருவுக்கு இடைப்பட்ட பகுதியில் உணவகங்களும், கேளிகை விடுதிகளும் உள்ளது. வழக்கமாக இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

பரபரப்பாக இயங்கும் இந்தப் பகுதியில் , நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் திடீரென வெடித்துச் சிதறியது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.முன்னதாக கார் வெடித்து சிதறியதில் 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

கார் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான (எஃப்டிஐ) விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்ட விசாரணையில், கார் வெடித்து சிதறியது, திட்டமிட்ட செயலாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!