அம்பலமாகும் சிறைச்சாலை படுகொலை! – விசாரணையில் திருப்பம்.

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப் பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரியவந்ததை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிரதேப்பரிசோதனையின் போது 8 பேர் துப்பாக்கிசூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரேதப்பரிசோதனைகளிற்கு முன்னர் பொலிஸாரும் சிறைச்சாலை ஆணையாளர் அலுவலகமும் கைதிகளிடையே ஏற்பட்ட மிகமோசமான மோதலே உயிரிழப்புகளிற்கு காரணம் என தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது துப்பாக்கி சூட்டுக்காயங்களினால் கைதிகள் உயரிழந்தமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறைச்சாலை கலவரத்தில் 8 பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்தனர் என்பது உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் எத்தனை பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு வியாழக்கிமை வரை காயமடைந்த கைதிகள் உட்பட 726 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து கலவரங்கள் மூண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!