ஈபிடிபி, முன்னணியிடம் ஆதரவு கோரியிருந்தார் மாவை!

யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை எனக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!