நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 16 இலட்சத்து 71 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 3 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதிக்கமைய ஒரு கிலோகிராம் தரமான நாட்டரிசி நெல்லை 50 ரூபாவிற்கும், ஏனையவற்றை 44 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் தரமான சம்பா அரிசி நெல்லை 52 ரூபாவிற்கும், ஏனையவற்றை 46 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நெல் கொள்வனவு செய்யும் முதலாவது நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் இந்த மாதம் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!