மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் நபர்களிடம் ரப்பிட் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கும் நடவடிக்கை இன்று முதல் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பிரவேசிக்கும் 11 இடங்களில் ரப்பிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பிரவேசிக்கும் நபர்கள் மூலம் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!