சிறையில் திடீரென சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சசிகலா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா, சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கைதான சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எப்போது விடுதலையாவார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன.

இந்நிலையில் ஜனவரி 27 -ம் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அவரது கட்சி நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் இதனை உறுதிபடுத்தியுள்ளனர். நீதிமன்றம் விதித்த அபாராதத் தொகையை, சசிகலா செலுத்திவிட்டதால், அவர் விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சசிகலா நலமாக உள்ளார், அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து சசிகலாவின் உறவினர்களோ அல்லது டிடிவி தினகரனோ மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே சசிகலா ரிலீசாவது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!