மாலத்தீவு, பூடானுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா!

இந்தியாவில் இருந்து மாலத்தீவு, பூடனுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் அந்நாடுகளுக்கு சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் முதற்கட்டமாக பூடான் மற்றும் மாலத்தீவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசிகள் புதன்கிழமை சென்றடைந்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது,

நட்பு நாடுகளுக்கான எடுத்துக்காட்டாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் மாலத்தீவு மற்றும் பூடானை சென்றடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை அனுப்பப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!