உள்ளூர் பொருளாதார கொள்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதே நோக்கம் -பிரதமர்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய உள்ளுர் பொருளாதார கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டி மாகுமபுர பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள பாதணி தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதமர் இதனை கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலகின் ஏனைய நாடுகளைவிட வரலாற்றில் இலங்கை பல்வேறு துறைகளில் மதிப்புமிக்கதாக திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டின் குறிக்கோள் மாற்றமடைந்து காணப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களினதும் நாட்டினதும் குறிக்கோள் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட்டுவருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எந்தவொரு சந்தரப்பத்திலும் அரசாங்கம் என்ற ரீதியில் கடமைகளை நிறைவேற்றுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!