அமெரிக்காவில் பெண் மருத்துவரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், ஐந்து மருத்துவமனை ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், மாலை 4.30 மணியளவில், டெக்சாசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், Dr Katherine Lindley Dodson (43) என்ற பெண் மருத்துவர் உட்பட ஐந்துபேரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டார்.

அவரது பெயர் Bharat Narumanchi என்றும், அவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்பதும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் போராடிக்கொண்டிருந்தவர் என்பதும் பின்னர் தெரியவந்தது.

பல மணி நேரம் பொலிசார் அவருடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றும் பலன் ஒன்றும் கிட்டவில்லை.

பின்னர், Bharat பிடித்துவைத்திருந்தவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டனர்.

அவர்களை Bharat விடுவித்தாரா, அல்லது அவர்களே தப்பினார்களா என்பது குறித்த தகவல் இல்லை.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பின், இரவு 10 மணியளவில் பொலிசார் மெதுவாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

அப்போது, Bharat மற்றும் Dr Katherine இருவரும் பிணமாக கிடப்பதை பொலிசார் கண்டனர்.

Bharat, Dr Katherineஐ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது.

Bharat, இதே மருத்துவமனையில் ஒரு தன்னார்வலராக பணியாற்ற விண்ணப்பித்துள்ளார், அவரது விண்ணப்பத்தை மருத்துவமனை நிராகரித்துவிட்டிருக்கிறது.

அதற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா, Bharat ஏற்கனவே தன்னார்வலராக பணியாற்ற விண்ணப்பிக்கும்போது Dr Katherineஐ சந்தித்தாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!