இராணுவத்தை தாழ்வாரத்துக்குள் கொண்டு வந்தால் இது தான் நடக்கும்!

மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளதை இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பக்கத்தில் ,

“ மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தாழ்வாரத்திற்குள் கொண்டு வந்தால், இராணுவம் மக்கள் ஆணையின் செல்லுபடியை தீர்மானிப்பதில் நீதித்துறையினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் பங்களிப்பை தவிர்க்க விரும்புவார்கள் இது தவிர்க்க முடியாத விடயமாகும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!