6 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

கினியா மற்றும் காங்கோ நாடுகளில் புதிய தொற்றுநோய் பரவல் பதிவான பின்னர் 6 நாடுகளில் எபோலா பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு இன்று எச்சரித்துள்ளது. கினியா நாட்டில் திடீரென்று எபோலா பரவலுக்கு சிகிச்சை பலனின்றி ஐவர் பலியான நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எபோலா தொற்றுநோய் பரவல் இருப்பதாக கினியா ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளும் கினியாவின் மிக அருகாமையில் அமைந்துள்ள அண்டை நாடுகளாகும்.

சியரா லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட நாடுகள் முந்தைய பெரிய எபோலா பரவலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன.

எஞ்சிய 4 நாடுகளாக மாலி, கினியா-பிசாவ், செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டில் மட்டும் இதுவரை 300 பேர்களுக்கு எபோலா பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. கினியாவில் இந்த எண்ணிக்கை 109 என கூறப்படுகிறது.

2013-2016 ஆம் ஆண்டின் மிக மோசமான தொற்றுநோயாக கருதப்பட்ட எபோலா பரவல், கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மொத்தமாக 11,300 க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!