இலங்கையையும், சிரியாவையும் கண்காணிப்பில் வைத்திருப்போம்!

இலங்கை தொடர்பாக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 46 அமர்வின் தொடக்க நாளான இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ இலங்கையையும் சிரியாவையும் பிரிட்டிஸ் அரசாங்கம் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம்.

மனித உரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம். மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும் அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!