இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து வாக்களியுங்கள்! – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் நிலையான அமைதி மற்றும் மனித உரிமைகள் பொறுக்கூறல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அநாவசியமான அழுத்தங்களையும் தலையீடுகளையும் இலங்கை விரும்பவில்லையெனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!