பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாயால் நேர்ந்த கதி!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து தாய் வீசிச்சென்ற சம்பவம் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுபற்றி திருச்சி விமான நிலைய பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு பொலிசார் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, அங்கு ஒரு சாக்குப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த பையை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.

விசாரணையில், அந்த குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததும், அதனால் அந்த குழந்தையை அதன் தாய் சாக்குப்பையில் வைத்து வீசிச்சென்றதும் தெரியவந்தது.

பின்னர், அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

குறித்த குழந்தையின் உரிமையாளர் யார்? எதற்காக இக்காரியத்தினை செய்தனர்? என்று பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!