கொவிட் 19 சடலங்களை புதைக்க தமது சொந்த நிலத்தை வழங்க முன்வந்த முஸ்லீம் பிரதிநிதி!

கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்க செய்யும் விவகாரத்தில், இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசாங்கம் தீர்மானங்கள் மேற்கொள்ள மேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்ஹா மஃருப் தெரிவித்துள்ளார்.

இரணைதீவு பகுதியில் கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில், தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தமது சொந்த காணியை தருவதற்கும் தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்ஹா மஃருப் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!