அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் -ஜனாதிபதி

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.

மேலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பெண்களின் பங்கு மிகச் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணப் பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்படாத போதிலும், தேசிய உற்பத்திக்கான பெண்களின் பங்களிப்பின் பெறுமதி அளவிட முடியாதது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு நாடு பெண்களை நடத்தும் விதமே அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டி என தெரிவித்துள்ள அவர், இந்த விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!