ஐ.நா.விடம் நீதி கோரி அரசின் பொறுமையை சோதிக்கின்றனர்!

அரசுக்கு எதிராகவும், அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையிலும் ஐ.நா.விடம் நீதி கோரி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஐ.நா.வோ அல்லது சர்வதேச நாடுகளோ தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது. எனவே, தேவையற்ற போராட்டங்களை தமிழ் மக்கள் உடனே நிறுத்த வேண்டும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

போரின் போது தமிழ் மக்களுக்கு அநீதிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கான தீர்வுகளை அரசு தான் வழங்கும். அதை விடுத்து நாட்டின் சட்ட திட்டங்களை மீறி ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளும்,புலம்பெயர் அமைப்பினரும் செயற்படுகின்றனர்.

இரு தரப்பினரும் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்குகின்றனர்.அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பதை தமிழ் மக்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!