உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை அரசாங்கம் காப்பாற்ற முயற்சிப்பதாக விமல் கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் காப்பாற்றுவதற்கு முயற்சித்துவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்ற நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!